காதலனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட 10ஆம் வகுப்பு மாணவி!
காதலனுடன் ரயில் முன் பாய்ந்து 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
சென்னை உள்ளகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மன வேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளங்கோவனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால் 10ம் வகுப்பு மாணவியுடன் வெளியே சென்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
தற்கொலை
அப்போது தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நாம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே இருவரும் கட்டிப்பிடித்தபடி மின்சார ரெயில் முன்பாய்ந்தது விசாரணையில் தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறிது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.