வி.ஜே.சித்ரா தற்கொலை வழக்கு சூடு பிடித்தது - அந்த அரசியல்வாதி யார்? - ஹேம்நாத்திற்கு செக் வைத்த போலீசார்

V. J. Chitra
By Nandhini May 16, 2022 07:28 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

'என் மனைவியின் தற்கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்கிறது. அதற்கு நான் உடன்படாததால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் என்று ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

மேலும், அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன். சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், என் மகள் சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்றும், பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என போலீசார்தான் விசாரிக்க வேண்டும். வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம் ஆடுகிறார் என்று சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஹேம்நாத் தெரிவிப்பது போல, சித்ரா தற்கொலைக்கு துாண்டிய அரசியல்வாதிகள் யார் என்றும், அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலையில் போலீசார் தற்போது இந்த வழக்கு விவகாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதனால், புகார் தாரரான ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால், சித்ராவின் பெற்றோரிடமும் விசாரிக்கப்போவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வி.ஜே.சித்ரா தற்கொலை வழக்கு சூடு பிடித்தது - அந்த அரசியல்வாதி யார்? - ஹேம்நாத்திற்கு செக் வைத்த போலீசார் | V J Chitra Hemnath