எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது..!

Tamil nadu Sri Lanka
1 மாதம் முன்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் அதில் இருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது..! | 5 Tamil Nadu Fishermen Arrested

அதன்பின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாளே நாகை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றம் - பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.