அடுத்த 2 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu-rain
By Nandhini Oct 31, 2021 03:26 AM GMT
Report

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக பல இடங்களில் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு - தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும்.

இதன் காரணமாக நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்யும். அடுத்து இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல் உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.