கோர விபத்து; நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் - 5 பேர் பலி, 40 பேர் படுகாயம்!
பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
வாணியம்பாடி அருகே பெங்களூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது. திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றை உடைத்து சென்னையில்
இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. உடனே, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சினிமாவை மிஞ்சிய மணப்பாறை பேருந்து விபத்து..5 பேர் உயிரிழந்த பரிதாபம் - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
5 பேர் பலி
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.