6 மாத கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்த 5 காதலர்கள் - அதிர்ச்சி!
பள்ளி மாணவியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கர்ப்பம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயிறு பெரிதாக இருந்துள்ளது, மேலும், கடுமனையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அவரது தாய் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அதனை தொடர்ந்து அந்த மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்பொழுது அந்த மாணவி 6 மத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
5 பேர்
இந்நிலையில், போலீஸ் விசாரணை நடத்தியதில், அந்த மாணவி சமூக வலைத்தளம் மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது விஜயகுமார் என்பவருடைய மகன் விஷ்ணு என்பவரை காதலித்து வந்ததாகவும் அதனையடுத்து சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் வயசு என்பவரை பத்தாம் வகுப்பில் காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது.
சேரானூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை 11 ஆம் வகுப்பு படிக்கும் போதும், சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவரையும், சேரனுர் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரையும் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். இந்த 5 பேரும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறுதி செய்து அவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.