தகாத உறவிற்கு அழைத்த இளைஞர்.. மறுத்ததால் பிளஸ் 2 மாணவர் வெட்டிக் கொலை - கொடூரம்!
இளைஞர் ஒருவர் தகாத உறவிற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கடலூர் மாவட்டம், மேல்புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் ஜீவா என்ற 17 வயது சிறுவர். இவர், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (22) என்ற என்ஜினீயரும் நண்பர்கள். ஜீவாவை ஆனந்த் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்பொழுது ஜீவாவை தகாத உறவிற்கு அழைத்ததாக தெரிகிறது. அதனை மறுத்த மாணவர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், கோவில் திருவிழாவின்போது ஜீவா, ஒரு மாணவியுடன் பேசிக்கொண்டிருந்தார், அதனை பார்த்த ஆனந்த், தனது மொபைலில் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் அவரிடம் சென்று தகாத உறவிற்கு ஒத்துழைக்காவிட்டால் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கொலை
இந்நிலையில், கடுப்பான ஜீவா அவரது மொபைலை வாங்கி உடைத்தார், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக ஜீவா, ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தனது நண்பா் பிரித்திவிராஜியுடன், சிறுநீர் கழிக்க சென்றார்.
அப்பொழுது அங்கு பைக்கில் வந்த ஜீவாவிடம் உடைத்த தனது செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் எப்போது வாங்கித்தருவாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது, அதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவை சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த பிரிதிவிராஜ் கூச்சலிட்டார். உடனே ஆனந்த், கத்தியால் அவரது கையில் கிழித்து விட்டு பைக்கில் தப்பிச் சென்றார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.