காதலுக்காக திருநங்கையாக மாறிய ஆசிரியர் - சர்ஜரிக்குப்பின் எஸ்கேப் ஆன காதலன்!
காதலனுக்காக திருநங்கையாக ஆசிரியர் மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு
ஆந்திரா, விஜயவாடாவில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 2019ல் ஆலோகம் பவன், நாகேஸ்வரராவ் என்ற இருவரும் பிஎட் படித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தன்பாலின ஈர்ப்பாளராக இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
காதலன் மாயம்
இதனால், பவனை டெல்லிக்கு அழைத்து சென்ற நாகேஸ்வரராவ் அங்கு அவருக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளார்.
அதன்பின், அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் பவன் தன்னுடைய பெயரை பிரம்மராம்பா என்று மாற்றி கொண்டு ஊர் திரும்பியுள்ளார். ஆனால், நாகேஸ்வர ராவ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து தலைமறைவாகியுள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்த பவன் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு காதலனை தீவிரமாக தேடி வருகிண்றனர்.