இனி பேசவேண்டாம்.. ஒதுங்கிய இளம்பெண், கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற சிறுவன் - அதிர்ச்சி!
சிறுவர் ஒருவருடன் பேசுவதை நிறுத்தியதால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்
நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா (வயது 18). இவர் நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள பேன்சி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுக்க குடோனுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்பொழுது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார், இதனை கண்டு அதிர்ச்சியில் அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
திருமணமாகியும் குழந்தை இல்லை.. மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கத்தியால் குத்திய கணவர் - அதிர்ச்சி!
கொலை
இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்பொழுது இந்த பெண்ணும் இதே கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனும் காதலித்து வந்தது தெரியவந்தது. இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததும், அவர் அந்த சிறுவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இது குறித்து அவர்கள் வேலை பார்த்த கடைக்கும் தெரியவந்தது, அதனால் அந்த சிறுவனை வேலையை விட்டு நிறுத்தினர்.
மேலும், அந்த பெண்ணிடம் பேசுமாறு கூறினார், அதற்கு அவர் இனி உன்னிடம் பேசமாட்டேன் என்று ஒதுங்கிவிட்டார். இதனால் ஆத்திரத்தில் , அந்த பெண் குடோனுக்கு சென்றபோது பின்தொடர்ந்து பேச முயற்சித்தார், அவர் மறுத்ததும் கத்தியால் அவரை விரட்டி குத்தி கொன்றுவிட்டு தப்பிச்சென்றார். அந்த சிறுவனை தேடி கைது செய்த போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.