மதுபோதையில் தகராறு செய்த ரவுடி.. பொறுமையிழந்து போட்டுத்தள்ளிய 14 வயது சிறுவன் - அதிர்ச்சி!

Attempted Murder Kanyakumari Death
By Vinothini Sep 11, 2023 06:10 AM GMT
Report

ரவுடி ஒருவர் தகராறு செய்ததால் கடுப்பான சிறுவர் ஒருவர் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடி

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமுனை பகுதியில் உள்ள ரட்சகர் என்ற தெருவைச் சேர்ந்தவர் சகாயம் 43 வயதான இவர் ஒரு மீனவர். இவர் அப்பகுதியில் பல தகராறுகள் மற்றும் குற்றசமபவங்கள் செய்துள்ளார். இவர் மீது பல குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. இவர் இரவானால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

14-years-boy-killed-a-man

இவர் அந்த பகுதியில் வருபவர்களை அவதூறு பேசி வம்பிழுத்து வந்தார், அப்பொழுது திருப்பி கேட்க வந்தால் அடித்து தகராறு செய்து வந்தார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாயம் கடற்கரை ஓரம் அமர்ந்துகொண்டு 14 வயது சிறுவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார், அப்பொழுது சிறுவன் முறைத்ததால் மது பாட்டிலால் அடித்துள்ளார்.

போட்டுத்தள்ளிய சிறுவன்

இந்நிலையில், அடுத்த நாள் அந்த சிறுவர் தனது நண்பர்களிடம் கூறி சகாயத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு கடற்கரை அருகே சிறுவனும், அவனது நண்பர்களும் கையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர், அப்பொழுது மதுபோதையில் சென்ற சகாயத்தை வழிமறித்தனர். அவர்களை தாக்க தொடங்கினார் சகாயம், அப்பொழுது சிறுவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

14-years-boy-killed-a-man

அப்போது, சகாயத்திடம் அடி வாங்கிய சிறுவன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சகாயத்தின் மார்பில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சகாயம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்திய போது, அங்கு கிடந்த கத்தியை எடுத்துள்ளனர். பின்னர் அதில் பதிந்திருந்த கைரேகையை வைத்து விசாரணை செய்து சிறுவனை கைது செய்தனர்.