பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - சக மாணவர்கள் வெறிச்செயல்!
10ஆம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
ஹைதராபாத் ஹையாத் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு அவருடன் வகுப்பில் படிக்கும் சில மாணவர்களும், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் சென்றுள்ளனர்.
அப்போது மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதனை உறுதி செய்துக்கொண்ட மாணவர்கள், அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
5 பேர் கைது
மேலும் இதனை வெளியே கூற கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் கழித்து மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவருடன் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அதன்பின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.