திடீரென வீசிய பயங்கர சூறைக்காற்று; 5 பேர் பலி - 100 பேர் காயம்!

West Bengal Death
By Sumathi Apr 01, 2024 10:09 AM GMT
Report

திடீர் சூறைக்காற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

திடீர் சூறைக்காற்று

மேற்குவங்கம், வடக்கு பகுதியில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் திடீர் சூறைக்காற்று பலமாக வீசியது. இதில் விளைநிலங்கள்,குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

west bengal

தொடர்ந்து, சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் செல்போன் கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதில் கட்டடங்கள் சேதமடைந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் புரட்டியெடுத்த ‘இடா’ புயல் - வெள்ளத்தில் மூழ்கியது நகரம் - தத்தளிக்கும் மக்கள்

அமெரிக்காவில் புரட்டியெடுத்த ‘இடா’ புயல் - வெள்ளத்தில் மூழ்கியது நகரம் - தத்தளிக்கும் மக்கள்

பிரதமர் இரங்கல்

மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடியும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாகவும், இரங்கல் தெரிவித்தும், கனமழை மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் செய்யவேண்டிய அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.