அமெரிக்காவில் புரட்டியெடுத்த ‘இடா’ புயல் - வெள்ளத்தில் மூழ்கியது நகரம் - தத்தளிக்கும் மக்கள்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரண்டு நாட்களாக தாக்கியதை தொடர்ந்து அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
‘இடா’ புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. முன்னெரிச்சரிக்கை விடப்பட்டபோது, உடனடியாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இதனால், பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ‘இடா’ புயலின் தாக்கத்தால் நியுயார்க் நகரிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை மழை தொடர்ந்து நீடித்து வந்ததால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் மழைநீர் ஆறுகள் போன்று காட்சியளித்து பெருக்கெடுத்து ஓடுகிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நியுயார்க் நகரில் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று இரவு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.