பயங்கர விபத்து; 50 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து, 7 பேர் பலி - பதைபதைக்கும் சம்பவம்!
ஏற்காடு மலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
இந்த ஆண்டு கோடை வெயில் வாடி வதைப்பதால் அந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் தங்களது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என சுற்றுலா செய்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து சேலத்தை நோக்கி சுற்றுலா பயணிகளை கொண்ட தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்காடு மலையின் 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது.
6 பேர் பலி
அதாவது வளைவில் திரும்பும்போது பேருந்து 50 அடி கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிறுவன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காயம் அடைந்த நபர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.