அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்.. பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதியதில் 7 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
நேற்று இரவு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் உள்ள திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த கார் அந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த காரில் மொத்தம் 11 பேர் பயணித்தனர். இந்த பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், செங்கம் உட்கோட்ட காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அறிந்ததும் டிஐஜி முத்துசாமி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.