தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கெல்லாம் தெரியுமா?
தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடர் விடுமுறை
விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (செப்.28) மீலாது நபி, செப். 29-ம் தேதி சனிக்கிழமை, அக்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.
இடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுக்கும்பட்சத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும்,
சிறப்பு பேருந்துகள்
செப்.29-ம் தேதி 450 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து முக்கியஇடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், அக்.2-ம் தேதி சொந்தஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.