சொந்த ஊருக்கு கூட்டமாக வெளியேறிய வடமாநிலத்தினர்; ஸ்தம்பித்த ரயில்வே ஸ்டேஷன் - என்ன காரணம்?
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்தனர்.
தொடர் விடுமுறை
பீகார், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் திரண்டனர். இதனால் ரயில் நிலையத்தில், கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.
கூட்ட நெரிசல்
இதற்கிடையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக சென்னையில் நேற்று மட்டும் 600க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், கோயம்பத்தூர் , மதுரை, திருச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. அதன்படி மொத்தம் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.