களைகட்டும் தீபாவளி.. ஒரே நாளில் ரூ. 5 கோடிக்கு விற்பனையான ஆடுகள் - பரபரக்கும் சந்தை!

Tamil nadu Kallakurichi
By Vinothini Nov 08, 2023 06:25 AM GMT
Report

பண்டிகை நாளை முன்னிட்டு ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

ஆட்டு சந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டு சந்தை வழக்கமாக நடந்து வருகிறது. அதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் கொண்டு வரப்படும்.

5-crores-worth-goat-sold-in-ulundurpet-goat-market

இதனை திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை மாநிலம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். இங்கு செம்மறி ஆடுகள் மற்றும் மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடு இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

தன்னை வளர்த்தவருக்காக மருத்துவமனை முன்பு 4 மாதங்களாக காத்திருக்கும் நாய்!

தன்னை வளர்த்தவருக்காக மருத்துவமனை முன்பு 4 மாதங்களாக காத்திருக்கும் நாய்!

தீபாவளி

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால் அந்த நாளில் அதிகமாக ஆட்டுக்கறி விற்பனை அதிகரிக்கும் அதனால் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று நள்ளிரவு முதலே சந்தைக்கு வந்தனர்.

5-crores-worth-goat-sold-in-ulundurpet-goat-market

இன்று அதிகாலை 3 மணியளவில் இருந்து ஆடுகள் வரத்து தொடங்கியது. அதில் ஆடுகளின் ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, அதாவது காலை 7 மணிக்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகிவிட்டது. மொத்தத்தில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வார சந்தை ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.