நாளை பக்ரீத் பண்டிகை...800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Eid-al-Adha Government of Tamil Nadu Chennai
By Thahir Jun 28, 2023 05:50 AM GMT
Report

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை பக்ரீத் பண்டிகை

இஸ்லாமியர்களின் தியாக திருநாள் என சொல்லப்படும் பக்ரீத் பண்டிகை நாளை ( ஜுன் 29 தேதி) கொண்டாடப்பட உள்ளது.

Special buses run on the occasion of Bakrit

இதையடுத்து தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜுன் 28) சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Special buses run on the occasion of Bakrit

எனவே தொலைதுார பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.