தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை - சூப்பரான பிளானை கையிலெடுத்த தமிழக அரசு
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14 (தமிழ் வருடப்பிறப்பு), ஏப்ரல் 15 (புனித வெள்ளி), ஏப்ரல் 18 (ஈஸ்டர் சன்டே) ஆகிய தினங்கள் அடுத்தடுத்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படவுள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து 13 ஆம் தேதி 500 சிறப்பு பேருந்துகளும் ,16 ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சேவை இயக்கப்பட உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.