42 மணி நேரம் தான் வாரத்திற்கு வேலை; ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கே தெரியுமா?
ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
ரூ.1.5 கோடி ஊதியம்
ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. அங்கு 40 பேர் மட்டும் தான் வசிக்கின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகம். மேலும், இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சம், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் வழங்கப்படும். வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.
ஆர்வம், அனுபவம்
இதன்படி, மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வமும், கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் விண்ணப்பதாரர்களுக்கு இருக்கு வேண்டும்.
இங்கு பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.