கல்யாண செலவு எல்லாம் எங்களுடையது..வந்தா மட்டும் போதும் - அரசு அதிரடி!
திருமணம் செய்து கொள்ள பல லட்சம் தொகையை பரிசாக தருவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலி அரசு
குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மிக முக்கியமான நாடு இத்தாலி. இங்கு குடியேற்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என இத்தாலு அரசு அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் கூட பல வீடுகள் காலியாக உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நகரத்தில் வாழ்ந்த பல குடும்பத்தினர், பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று குடியேறிவிட்டது என தெரிவிக்கப்படுகிறது. எனவே, குறைந்த காலக்கட்டத்தில் பெருவாரியான மக்களை ஈர்ப்பதற்காக, அங்கு குடியேறுவோருக்கு இவ்வாறி சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.
பரிசுத் தொகை
நவீன வாழ்க்கை முறைக்கு தேவையான வசதிகள் இல்லாததுதான், இங்கிருந்த மக்கள் வெளியே செல்வதற்கும், இங்குள்ள வீடுகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுவதற்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், லாசியோ என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டால், ரூ 1.67 லட்சம் பரிசாக வழங்கவும் இத்தாலி முன்வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள் என பல ரம்மியமான இடங்கள் இத்தாலியில் திருமண தம்பதிகளை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.