இங்கிலாந்து, இத்தாலி, துருக்கியில் தோன்றிய சூரிய கிரகணம் - வைரல் புகைப்படம்

Italy Turkey England
By Nandhini Oct 25, 2022 12:06 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இங்கிலாந்து, இத்தாலி, துருக்கியில் தோன்றிய சூரிய கிரகணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூரிய கிரகணம்

இந்தியாவில் இன்று சூரிய கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழவுள்ளது.

குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், சென்னையில் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று தகவல் கொடுத்தனர்.

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது என்றும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பகுதி சூரிய கிரகணம் தோன்றியதை அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

solar-eclipse-england-turkey-taly

இங்கிலாந்து, இத்தாலி, துருக்கியில் தோன்றிய சூரிய கிரகணம்

இந்நிலையில், இன்று காலை இங்கிலாந்து, இத்தாலி மற்றும் துருக்கியில் பகுதி சூரிய கிரகணம் தோன்றிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் இருந்து காணக்கூடிய பகுதி சூரிய கிரகணத்தின் படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இது குக்கீயின் மிகச்சிறிய நுனி போல் கறுக்கப்பட்ட சூரியனின் சிறிய நுனியை வெளிப்படுத்தியுள்ளது.