கோயிலுக்குள் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை வீச்சு - அதிர்ச்சி சம்பவம்!
கோயிலுக்குள் பசுவின் தலையை சிலர் வீசி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பசுவின் தலை
மத்தியப் பிரதேசம், ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா என்ற இடத்தில் உள்ள கோயிலில் பசு மாட்டின் துண்டிக்கப்பட்ட தலை சில நாட்களுக்கு முன் வீசப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், பசுவின் தலையை கோயிலில் தூக்கி எறிந்தது சல்மான் மேவாதி, ஷகிர் குரேஷி, நோசன் குரேஷி, ஷாருக் சத்தார் ஆகியோர் என்பது தெரிந்தது.
4 பேர் கைது
உடனே, மத உணர்வை புண்படுத்தியது, மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தது மற்றும் இதர குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர்மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளதாக டிஐஜி மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகளின் வீடுகள் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்தன. அவற்றையும் மாவட்ட நிர்வாகத்தினர் இடித்துள்ளனர்.