கோவாவுக்கு பிளான் போட்ட குடும்பம் - கூகுள் மேப்பால் கடைசியில் நடுக்காடுதான்!
கோவாவுக்கு செல்வதற்காக புறப்பட்ட குடும்பம் நடுக்காட்டில் திணறியுள்ளனர்.
கூகுள் மேப்
பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இதற்காக வழி பார்ப்பதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அடர்ந்த வனப் பகுதியில் கூகுள் மேப் வழி காண்பித்துள்ளது. ஒருகட்டத்தில் இருள் சூழ தொடங்கியுள்ளது. மொபைல் நெட்வொர்க்கும் வேலை செய்யாமல் போயுள்ளது. ஒருவரையும் காணாத நிலையில் அந்தக் குடும்பத்தினர் பதறியுள்ளனர்.
சிக்கிய குடும்பம்
காருக்குள்ளேயே விடிய விடிய இருந்துள்ளனர். கூகுள் மேப் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அவர்களை சிக்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அந்தக் காரில் குழந்தைகள் உட்பட ஆறு முதல் ஏழு பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
பின் விடிந்ததும் மொபைல் சிக்னல் கிடைப்பதற்காக 4 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து சென்றுள்ளனர். மொபைல் சிக்னல் கிடைத்தவுடன் அவசர உதவி எண் 112 ஐ தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் அவர்களை காட்டில் இருந்து மீட்டு அழைத்து வந்துள்ளனர்.