போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க..அலெர்ட் செய்யும் கூகுள் மேப் - வைரல் புகைப்படம்!
கூகுள் மேப்பில் போலீஸ் சோதனையை வாகன ஓட்டிகளை அலெர்ட் செய்த படம் வைரலாகி வருகிறது.
கூகுள் மேப்
சென்னை வாகன ஓட்டிகளுக்கு எங்கெல்லாம் போலீஸார் சோதனை செய்வார்கள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு பெரும்பாலான பகுதிகளில் வாகன சோதனை எங்கெல்லாம் நடக்கும் என்று தெரியாது. அப்படி போகும்போது ஹெல்மெட் இல்லாமல் சென்று போலீசாரிடம் சிக்கி கொள்வது உண்டு.
அவர்களுக்கு ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக அபராதம் விதிக்கிறது. ஹெல்மெட் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், இன்சூரன்ஸ் இல்லாவிட்டாலும் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். அதுமட்டுமல்லாமல் பெரிய வாகனங்களும் போலீசாரிடம் சிக்குவதுண்டு.
புகைப்படம்
இந்த நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் தினசரி எங்கெல்லாம் வாக சோதனை செய்வார்களோ அந்த இடங்களை எல்லாம் கூகுள் லோக்கசனில் நெட்டிசன்கள் அலர்ட் செய்கிறார்கள். அதாவது, இங்கு போலீஸ் சோதனை செய்வார்கள், ஹெல்மெட் போடு என்று அலார்ட் செய்து இடங்களை காண்பிக்கிறார்கள்.
இதனை வைத்து சாலை விதிகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் வேறு பாதையில் செல்கிறார்கள். முன்னதாக பெங்களூர் நகரில் எங்கெல்லாம் போலீஸ் சோதனை செய்வார்களோ அந்த இடங்களை கூகுள் காட்டியது. அதே போல தற்போது சென்னையிலும் கூகுள் மேப் போலீஸ் சோதனை செய்யும் இடங்களை காட்டுகிறது.