ஃபாஸ்ட்டா போறதுக்கு கேட்டா பாலைவனத்துக்கு வழி சொன்ன Map - மன்னிப்பு கேட்ட கூகுள்!
Google
United States of America
Los Angeles
By Sumathi
2 years ago
தவறாக வழி காட்டியதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
கூகுள் மேப்
அமெரிக்கா, லாஸ் வேகாஸ் என்ற நகரத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகருக்கு ஒரு குழு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பாதை அவர்களை நெவாடா பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. பின்னர், அவர்கள் வந்த வழியே திரும்பிச் செல்ல முடியாதபடி அவர்களின் கார் மணலில் சிக்கிக் கொண்டது.
மன்னிப்பு
அதன்பின், ஒரு ட்ரக்கை வரவழைத்த குழுவினர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து. அந்தச் சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டது.
அதனையடுத்து, தற்போது பாலைவனத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தினரிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.