கூகுள் காட்டிய குறுக்கு வழி.. பாலைவனத்திற்கே போன குழு!
மேப்பை பார்த்து வழிமாறி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மேப்
நம் கையில் ஸ்மார்ட் போன் வந்த பின்னர் சமீப காலமாக அனைவரும் டிஜிட்டல் முறையை தான் அணுகுகின்றனர். அதில் முக்கியமாக கூகுள் மேப்பை பலரும் கண்மூடித்தனமாக நம்பி அது சொல்லும் பாதையில் சென்று மாட்டிக்கொள்கின்றனர்.
அதுபோல தற்பொழுது, அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற நகரத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகருக்கு ஒரு குழு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியில் சென்றுள்ளனர்.
அந்த மேப் காட்டிய வழி கரடுமுரடான மண் சாலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூகுள் மேப் மீது உள்ள நம்பிக்கையில் காரை ஓட்டிச் சென்றனர். இந்நிலையில், அந்தப் பாதை அவர்களை நெவாடா பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.
பின்னர், அவர்கள் வந்த வழியே திரும்பிச் செல்ல முடியாதபடி அவர்களின் கார் மணலில் சிக்கிக் கொண்டது. அதனால் ஒரு ட்ரக்கை வரவழைத்த குழுவினர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.