6 மாதங்களில் வீட்டில் சடலமாகக் கிடந்த 40,000 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்!

Japan Death
By Sumathi Sep 02, 2024 10:19 AM GMT
Report

6 மாதங்களில் சுமார் 37,000க்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளனர்.

வாட்டும் தனிமை

ஜப்பானில், வயதானோர் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் தனிமையாக வசித்து வருவது அதிகரித்து வருகிறது.

japan

இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்துள்ளனர்.

60 வருடங்களாக தூங்காமல் உயிர் வாழும் நபர் - என்ன காரணம்?

60 வருடங்களாக தூங்காமல் உயிர் வாழும் நபர் - என்ன காரணம்?


முதியவர்கள் இறப்பு

அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.

6 மாதங்களில் வீட்டில் சடலமாகக் கிடந்த 40,000 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்! | 37000 People In Japan Died Alone In Japan

இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது. 130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.