கட்டிப்புடி வைத்தியம்.. இப்போ இது பிஸ்னஸ், ஒரு மணிநேரத்திற்கு ரூ.12500 - அசத்தும் பெண்!
பெண் ஒருவர் கட்டிப்புடி வைத்தியத்தை பிஸ்னஸாக செய்து வருகிறார்.
வாட்டும் தனிமை
நியூயார்க் நகரம் என்பது எப்போதும் பிசியாக இருக்கக்கூட சிட்டி. ஆனாலும் இங்கு பல பேர் தனிமையில் தங்களது வீடுகளை விட்டு கரியர், பிஸ்னஸ் என ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதில் பல இளம் தலைமுறையினர் சக மனிதர்கள் உடனான இணைப்பை அதிகம் தேடி வருகின்றனர்.
இதனால் இந்த நகரத்தில் டச் தெரபி, கட்டிபுடி வைத்தியம் என்பதும் cuddling சேவைகளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது. ஓவிய ஆசிரியராக இருந்த ELLA என்பவர் இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் உருவான தனிமையை கவனித்து முழுநேர தொடு சிகிச்சை நிபுணராக மாறினார்.
பொதுவாக கட்டிப்பிடிப்பது என்றாலே தவறான தொழிலாக பலர் பார்க்கின்றனர், ஆனால் இது தனிமையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு நிவாரணமாக மாறியுள்ளது.
கட்டிப்புடி வைத்தியம்
இந்நிலையில், எல்லா என்ற அந்த பெண் தொடு சிகிச்சை பெறுவோருக்கு கைகளை பிடித்துக்கொள்ளவும், தங்கள் மனதில் இருப்பதை பகிரவும், ஆறுதலான அரவணைப்பையும் வழங்குகிறார். அது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 டாலர் தொகையை கட்டணமாக வசூலித்து வருகிறார்.
இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12500 ரூபாய் ஆகும். இவருடைய சேவையை பெறுவோர் துவக்கத்தில் 40 முதல் 60 வயதான திருமணமான ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில், சமீபத்தில் இளம் தலைமுறை பெண்களும் பலர் இங்கு வந்து ஆதரவு தேடுவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் 2017ல் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்த தொடு சிகிச்சை மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை அளித்து வருகிறார். இதற்காக Cuddlist's certificate-ஐ பெற்றுள்ளதாக கூறுகிறார்.