சந்தோஷமாக சுற்றுலா சென்ற தம்பதி.. 41 முறை ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொன்ற கணவர் - என்ன நடந்தது?

Attempted Murder Turkey Crime Death World
By Vinothini Nov 17, 2023 10:57 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

கணவர் தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதியினர் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கியிருந்தனர். அப்பொழுது இந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

man-killed-his-wife-by-stabbing-with-screwdriver

அதில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரை எடுத்து 41 முறை குத்தி கொடூரமாக கொன்றுள்ளார். அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

ஹோட்டலில் தம்பதியினர் செய்த மோசச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

ஹோட்டலில் தம்பதியினர் செய்த மோசச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

கொலை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ரத்தக் கறைபடிந்த டி-சர்ட் அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

man-killed-his-wife-by-stabbing-with-screwdriver

மேலும் விசாரணையில், மனைவி தனக்கு போதைப்பொருள் கொடுத்தபின் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், போலீசார் அந்த ஓட்டல் அறையில் சோதனை செய்தபோது எந்த ஒரு போதைப்பொருளுக்கான தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.