60 வருடங்களாக தூங்காமல் உயிர் வாழும் நபர் - என்ன காரணம்?
60 ஆண்டுகளாக ஒரு நிமிடம் கூட உறங்காமல் நபர் ஒருவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
தூக்கமில்லை
வியட்நாமை சேர்ந்தவர் தாய் நகோக்(80). இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கவே இல்லையாம். அவருக்கு சிறு வயதில் இருக்கும்போது ஒரு முறை காய்ச்சல் வந்ததால், அதன் விளைவாக அவர் தூக்கத்தை இழந்துள்ளார். பொதுவாக முன்று நாட்களுக்கு மேல் உறங்காமல் இருந்தால், மூளை செயலிழந்துவிடும்.
அது மரணத்தில் சென்று முடியலாம், அல்லது உடலில் வேறு விதமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். மனநல பாதிப்பு ஏற்படலாம். எனினும், இந்த மாதிரியான பிரச்னைகள் எதுவும் இல்லை என்கிறார். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு தான் உயிர்வாழ்ந்து வருகிறார்.
வாட்டும் தனிமை
இவருக்கு க்ரீன் டீ மற்றும் வைன் பிடிக்கும். தானும் மற்றவரை போல தூங்கவேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அவருக்கு இருக்கிறது. சரியான உறக்கம் இல்லாவிட்டால், இனம்புரியாத தனிமை ஒருவருக்கு வாழ்வில் வந்துவிடும்.
அந்த தனிமையால் பாதிக்கப்படுவதாக அவரது தாய் கூறியுள்ளார். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பாதிப்பால், கடந்த 1962 முதல் ஒரு நிமிடம் கூட இவர் கண் அசரவில்லை எனக் கூறப்படுகிறது.
ஒரு முறை கூட இவர் தூங்கி நாங்கள் பார்த்ததே இல்லை. இதற்காக பல மருத்துவர்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் பலனில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.