30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள்..உண்மையை போட்டுடைத்த முன்னாள் மாணவர் : மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது

Kerala
By Swetha Subash May 14, 2022 01:13 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார் முன்னாள் பள்ளி ஆசிரியர் ஆவார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார்.

இந்நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், சசிகுமார் ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள்..உண்மையை போட்டுடைத்த முன்னாள் மாணவர் :  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது | Kerala Teacher Arrested For Sexually Assaulting 60

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவவே இதனை பார்த்த பலரும் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகுமார் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள்..உண்மையை போட்டுடைத்த முன்னாள் மாணவர் :  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது | Kerala Teacher Arrested For Sexually Assaulting 60

இது போல கட்சி அளவிலும் சசிகுமார் பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் அவர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து சசிகுமார் கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். இந்நிலையில் சசிகுமார் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு சசிகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.