6 மாதங்களில் வீட்டில் சடலமாகக் கிடந்த 40,000 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்!
6 மாதங்களில் சுமார் 37,000க்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளனர்.
வாட்டும் தனிமை
ஜப்பானில், வயதானோர் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் தனிமையாக வசித்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனியாக தங்கி இருந்துள்ளனர்.
முதியவர்கள் இறப்பு
அவர்களில் 4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த கணக்கெடுப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.
இப்படி உயிரிழந்தவர்களில் 65 வயது முதல் 70 வயது தாண்டியவர்கள் அதிகம். வீட்டில் தனியாக இறந்தவர்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
4 ஆயிரம் பேர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியே கண்டுபிடிக்க முடிந்தது.
130 பேர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் குறைந்தது ஒரு ஆண்டாவது கவனிக்கப்படாமல் இருந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.