3600 ஆண்டுகளுக்கு முன் உபயோகிக்கப்பட்ட Lipstick கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா?
3600 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகிக்கப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெட் லிப்ஸ்டிக்
மேக் அப் கலாச்சாரம் என்பது இளம் பெண்கள், ஆண்கள் என எல்லோரிடத்திலும் தற்போது மோகத்தை உருவாக்கியுள்ளது. பல ஆயிரம் முன்னர் இருந்தே மேக் அப் மோகம் இருந்துள்ளது.
அதனை உண்மையாகும் வகையில் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகிக்கப்பட்ட ரெட் லிப்ஸ்டிக் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான உதட்டுச்சாயத்தை தென்கிழக்கு ஈரானில் உள்ள ஜிரோஃப்ட் பகுதியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழமையானது
இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையானது என்றும் நம்பப்படுகிறது. இந்த உதட்டுச்சாயம் ஹெமாடைட் போன்ற தாதுக்களால் ஆனது மற்றும் மாங்கனைட், பிரவுனைட்டால் கருமையாக்கப்பட்டது.
மேலும், இது சமகால லிப்ஸ்டிக் ரெசிபிகளை ஒத்திருக்கிறது. தற்போது இந்த லிப்ஸ்டிக் பழங்கால உள்ளூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.