ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள் - களைகட்டிய பாரிஸ்!
ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
பிரான்ஸ்
33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த போட்டியானானது இந்திய நேரப்படி நேற்று 11 மணி அளவில் தொடங்கின.
மேலும் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.இதில் 32 பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளன. பிரான்சில் 3 வது முறையாக நடத்தபடுகிறது. மேலும் 16 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக் போட்டி
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த முறை மட்டும் 2020ஆம் ஆண்டுக்கு பதிலாக கொரோனா பெருந்தொற்றால் அடுத்த ஆண்டான 2021-ல் நடத்தப்பட்டது. 206 நாடுகளைச் சேர்ந்த 10ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.

மேலும் இந்த போட்டியில் 5250 வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் களத்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய அணியினர் ககந் நரங் தலைமையில் அணிவகுத்தனர்.
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இந்திய அணியின் கொடியை ஏந்திச்சென்றனர்.
அதே போல் சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர்.
