ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சத்தியன் ஞானசேகரன். வருகிற ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது, இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய கண்டத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன். இதனால் தன்னுடைய சிறு வயது கனவு நிறைவேறியதாக நெகிழும் சத்தியன், கொரோனா ஊரடங்கிலும் ரோபோ மூலம் பயிற்சி மேற்கொண்டதே இந்த வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வாள்சண்டை வீராங்கனையான பவானி தேவி மற்றும் சரத் கமல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
