குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்; திறந்து பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் - அதிர்ச்சி சம்பவம்!
தண்ணீர் தொட்டிக்குள் குரங்குகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துர்நாற்றம்
தெலுங்கானா மாநிலம் நந்திகொண்டா கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரில் கடந்த ஒருவாரமாக துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து நேற்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்த தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.
வழக்குப்பதிவு
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரை நிறுத்தினர். பின்னர் குரங்குகளை அப்புறப்படுத்திய பின்னர் தண்ணீரை வெளியேற்றினர். மேலும், குரங்குகள் செத்து மிதந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள், மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தினர்.
தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.