அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை - கலெக்டர் முக்கிய தகவல்!
பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் தொட்டி விவகாரம்
காஞ்சிபுரம், திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் தொட்டியை தான் மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதிய உணவுக்காக இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்தபோது துர்நாற்றம் வீசியதில், வேறு குடிநீரில் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து பள்ளி உதவி தலைமையாசிரியர் காந்திராஜ் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆட்சியர் விளக்கம்
அதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் குடிநீர் தொட்டியில் ஆய்வு செய்தனர். மேலும், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், பயன்படுத்தப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியில் பாத்திரம் மற்றும் அரிசி மட்டுமே கழுவி வந்ததாகவும், துர்நாற்றம் அடித்ததன் காரணமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. , அதில் அழகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டுள்ளது.
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பழைய பயன்படுத்தாமல் உள்ள குடிநீர் தொட்டியை இடிக்க உத்தரவிட்டுள்ளார்.