தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை - வெளியான பகீர் பின்னணி!
தாய் தனது 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை
கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், உஷா தம்பதி. இவர்களுக்கு நிவேதா, ஷர்மிளா என 2 மகள்கள் இருந்தனர். இருவரும் அரசுப் பள்ளியில் 12, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
ரமேஷ் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இதில், போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன் பெற்று வந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மூவர் தற்கொலை
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ரமேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மனைவி மற்றும் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷை தேடி வருகின்றனர்.