மின்சார ரயில் மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட அப்பா, 2 மகள்கள் - சோகம்!
ரயில் மோதியதில் தந்தை மற்றும் 2 மகள்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை
திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவருக்கு 16 வயதான மகள் தர்ஷினி மற்றும் 18 வயது தாரணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பார்ப்பதற்காக அப்பா மற்றும் மகள்கள் கிளம்பி சென்றுள்ளனர். அப்பொழுது வேப்பம்பட்டு பகுதியில் ரயில் வருகிறதா என்பதை கவனிக்காமல் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
விபத்து
இந்நிலையில், திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த இவர்கள் 3 பேரும் சமத்துவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேம்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி 15 ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் உள்ளது, இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதும் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், உயிரிழந்த 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.