அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள் - சிறப்பு என்ன? பாதிப்பு என்ன?
மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை சட்டம் (ஐபிசி) குற்றவியல் நடைமுறை சட்டம்(சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம்(ஐஇசி) ஆகியவற்றிற்கு மாற்றாக புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பின்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாட்சிய அதினியம் போன்ற 3 குற்றவியல் சட்டங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளது இந்திய அரசு.
இந்த 3 சட்டங்களை 2023ஆம் ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்திருந்தது. அப்போது இதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்த நிலையில், சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள சட்டங்களின் முக்கிய அம்சங்களை தற்போது காணலாம்.
- புதிய குற்றவியல் சட்டங்களின் மூலம், புகார் அளித்தவர் மற்றும் புகாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் இருந்து FIR அதாவது முதல் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
- ஒருவர் எதாவது ஒரு வழக்கில் கைதானால், உடனடியாக அவரை தெரிந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதி கிடைக்கும் படி, எந்த ஒரு காவல் நிலையத்திலும் ஒரு புகாரினை அளிக்கலாம்.
- காவல் நிலையம் செல்லாமலே, வீட்டில் இருந்தே புகாரை அளித்து விடலாம்
- பெரிய குற்றச்சம்பவங்களில் சாட்சியங்கள் கலைக்கப்படுவதை தடுப்பதற்கு காவல்துறையினர் வீடியோ பதிவு செய்வது கட்டாயமயக்கப்படுகிறது.
- பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் பெண் மாஜிஸ்திரேட் தான் வாக்குமூலம் பெறவேண்டும்.
- 18 வயது எட்டாத சிறுமியரை கூட்டு பாலியல் செய்தால், மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
- புகார் பதிவது, சம்மன் அனுப்புவது போன்றவை கணினிமயமாக்கப்படுகின்றன.
- இந்திய தண்டனை சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 358 ஆக குறைப்படுகிறது. கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதல் விசாரணை முடிந்த 60 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும்.
- பயங்கரவாத குற்றங்கள் இனி ராஜதுரோகமாக என்பதற்கு பதிலாக தேசத் துரோகமாக வரையறுக்கப்படுகிறது.
-
பாலினம் பற்றி குறிப்பிடும் போது, இனி மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து கொள்ளபடுவார்கள்.