மீண்டும் சிறை செல்கிறாரா கெஜ்ரிவால்? - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கைது
டெல்லி அரசியலில் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் நடைபெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பதில் துவங்கி, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியிலும் இணைந்தார் கெஜ்ரிவால்.
நாட்டின் முக்கிய தலைவராக மாறியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார்.
அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஜூன் 4 ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.
நீதிமன்றம் மறுப்பு
இந்நிலையில் CT ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.