EVM - VVpat மீதான வழக்கு - அனைத்து மனுக்களும் தள்ளுபடி !! முழு தீர்ப்பு
வாக்குப்பதிவிற்கு காகித வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
EVM - VVpat வழக்கு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT காகித சீட்டுகளுடன் 100% எண்ணவேண்டும் என்ற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்ததுள்ளது. அதே போல, வாக்குப்பதிவு செயல்முறைக்கு காகித வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உள்ளிட்ட மனுதாரர்கள், தேர்தல் செயல்முறை குறித்து நம்பிக்கை ஏற்பட வாக்காளர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தல்கள் வைக்கப்பட்டன.
சின்னங்கள் பதிவேற்றம் எந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் அதனியா 45 நாட்கள் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் சந்தேகமிருந்தால் முடிவு அறிவித்த 7 நாட்களுக்குள் EVM'இல் உள்ள Micro Controller'ஐ சோதிக்க அனுமதி கோரலாம்.
அப்போது உரிய அனுமதியுடன் பொறியாளர்கள் பரிசோதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், செலவுத்தொகை திருப்பி அளிக்கப்படும். கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது நம்பிக்கையில்லை என்று தேவையற்ற சந்தேகங்களையே உருவாக்கும் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்கான சின்னங்களுக்கும் தனி தனி பார்கோடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.