EVM - VV Pat வழக்கு!! தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் ! உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
EVM மற்றும் VV - Pat வழக்கில் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையம் இன்று மத்திய 2 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில்,
Control Unit, Ballot Unit, VVPAT ஆகிய மூன்று அலகுகளும் அவற்றின் சொந்த Micro Controller'ஐ கொண்டுள்ளன.
இந்த Controller Physically அணுக முடியாது. அனைத்து Micro Controller'களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை அவற்றை மாற்ற முடியாது
வழக்கு
தேர்தல் நடைபெறு வரும் நிலையில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் வகையில் ஒப்புகை சீட்டு கொண்டுவரப்பட்டது. இந்த சீட்டு முழுமையாக எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தேர்தல் ஆணையத்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைத்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.