EVM ஒப்புகைச் சீட்டு வழக்கு - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டின் 18வது அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது.
அடுத்தடுத்த கட்டங்களாக வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்தலின் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் VV pat விவிபேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு வசதி பயன்படுத்துகிறது .
இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். 7 வினாடிகள் மட்டும் தெரியும் இவை அதன் பிறகு, பெட்டியில் விழுந்து விடுகின்றது. இந்த ஒப்புகைச் சீட்டு வாக்கு எண்ணும் போது முழுமையாக எண்ணப்படுவது இல்லை.
கேள்வி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பல குற்றச்சாட்டுகளையும் அதன் நம்பகத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்ற விசாரணையில்,
- Micro- Controller ஒருமுறை மட்டும் Program செய்யக்கூடியதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- எத்தனை Ballot Unitகளில் சின்னங்கள் பொருத்தப்படும்?
- Control Unit மட்டும் சீல் வைக்கப்படுமா? VV - Pat இயந்திரம் தனியாக வைக்கப்படுமா?
- Micro- Controller எதில் பொருத்தப்பட்டுள்ளது. VV - Pat அல்லது Micro- Controller.
இந்த கேள்விகளுக்கு மதியம் 2 மணிக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வருகின்றன.