நேரு பேரன் தானா ராகுல்? DNA டெஸ்ட் எடுக்கணும் - பினராயி விஜயன் ஆதரவு MLA சர்ச்சை கருத்து

Indian National Congress Rahul Gandhi Pinarayi Vijayan Lok Sabha Election 2024
By Karthick Apr 24, 2024 04:45 AM GMT
Report

கேரளா மாநிலத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

சர்ச்சை கருத்து

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் ஆதரவை பெற்ற சுயேச்சை MLA'வான பிவி அன்வர், வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

kerala-mla-harsh-comments-on-rahul-gandhi-nehru

பாலக்காட்டில் நேற்று(23-4-24) நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நீலம்பூர் தொகுதியான பிவி அன்வர், ராகுல் காந்தியின் போட்டியிடும் வயநாடு தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் நான். அவரை காந்தி என்ற குடும்பப்பெயரைச் சொல்லி அழைக்க முடியாது.

kerala-mla-harsh-comments-on-rahul-gandhi-nehru

அவர் இவ்வளவு கீழ்த்தரமான குடிமகனாக நடந்து கொள்கிறார். காந்தியின் குடும்பப்பெயரால் அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் ராகுல் காந்தி,. நேரு குடும்பத்தில் இது போன்ற உறுப்பினர்கள் இருப்பார்களா? நேரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அப்படிச் சொல்ல முடியுமா? இதில் எனக்கு அதிக சந்தேகம் உள்ளது.

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

DNA பரிசோதனை 

ராகுல் காந்தியின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். ஜவஹர்லால் நேருவின் பேரனாக வளர ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல் காந்தி பிரதமர் மோடியின் முகவரா என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்துள்ளன என்று அன்வார் பேசினார்.

kerala-mla-harsh-comments-on-rahul-gandhi-nehru

அன்வாரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் போதிலும், மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?'' என விமர்சித்திருந்தார்.