2வது மனைவி இளைஞருடன் உல்லாசம்; கண்டித்த கணவன் - இறுதியில் நேர்ந்த கொடூரம்!
கள்ளக்காதலை கண்டித்த கணவன் மனைவியால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
திண்டுக்கல், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(55). தையல் தொழிலாளியான அவரது முதல் மனைவி கார்த்திகா(46). இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால், சித்திரைசெல்வி (36) என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 மனைவிகளுக்கு தனித்தனி வீடு எடுத்து தங்கவைத்துள்ளார். இந்நிலையில், த்திரை செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த சலீம் (24) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.
தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்ததை கணவன் சரவணம் பார்த்துவிட்டார். அதன்பின் கடுமையாக கண்டித்து தகராறில் ஈடுப்பட்டுள்ளார். வழக்கம்போல் சரவணம் காலை முதல் மனைவியின் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, மதிய உணவிற்கு 2வது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.
கணவன் கொடூரக் கொலை
இதன்பின் வெகுநேரமாகியும் சரவணனை காணவில்லை என முதல் மனைவி தேடி இங்கு வந்து பார்த்ததில் சரவணம் சடலமாக கட்டிலில் கிடந்துள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த மனைவி போலீஸில் புகாரளித்துள்ளார். அதன்படி விரைந்த போலீஸார் 2வது மனைவியை பிடித்து விசாரித்தனர்.
அதில், சித்திரைசெல்வி அளித்த வாக்குமூலத்தில், நான் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள டீக்கடையில் சலீம் வேலை செய்தார். அடிக்கடி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தோம்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்ததை எனது கணவர் பார்த்து விட்டார். அதன்பிறகு இதுதொடர்பாக என்னிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்தார். இதனால் சலீமுடன் சேர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும் அவரை கொலை செய்தேன். வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்த எங்களை விசாரணை நடத்தி போலீசார் கைது செய்து விட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.