2-வது நாளாக ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை
சென்னையில் கடந்த 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
வடபழனியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஸ்கேன் மையத்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கந்தசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜன் நடத்தி வருகிறார்.
உயர்தர மற்றும் நம்பகமான மருத்துவ பகுப்பாய்வு படம் எடுத்தல் மையமாக ஆர்த்தி ஸ்கேன் இயங்கி வருகிறது. இந்த நிலையில்,சென்னை உள்பட தமிழகம் முழுவதும்,உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது.