நல்லா ஆரம்பிச்சி நாசமா போன சென்னை சூப்பர் கிங்ஸ்... ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றம்
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பரிதாபமாக தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
மகாராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 38, விராட் கோலி 30, லோம்ரர் 42 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி சிறப்பான தொடக்க தந்தனர். கான்வே 56, மொயீன் அலி 34, கெய்க்வாட் 28 ரன்களும் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் ஆடி 7 தோல்விகளுடன் தொடரில் இருந்து கிட்டதட்ட தொடரில் இருந்து வெளியேறியது.